CHURCH AT EL-SHADDAIR.K. Puram · Secunderabad, India

Fellowship vision

And They Continued Steadfastly…

Principles governing the New Testament Church as revealed to Brother Bakht Singh.

Settings
Download PDF
About this edition · D. R. Devadoss

THE ORIGINAL EDITION

D. R. Devadoss

Tamil
2012–2014
37 pages

View original PDF

Page numbers below correspond to the original PDF. The original is preserved for reference.

Back to the library

Page 01

அவர்கள்… உறுதியாய்த் தரித்திருந்தார்கள்

அப்போஸ்தலர் 2:42

D.R. தேவதாஸ்

சென்னை யேகோவா - ஷம்மா மூப்பர், காலஞ்சென்ற சகோ. R.P. துரைராஜ் அவர்களால் சொல்லப்பட்டு எழுதப்பட்டது

பிரதிகள் கிடைக்குமிடம் : எல்ஷடாய் ஜெபவீடு, செகந்தராபாத் 500 056. போன்: 040-27793655.

Page 02

முன்னுரை

ஆகையால்‌, சகோதரரே, நீங்கள்‌ நிலைகொண்டு, வார்த்தையினாலாவது, நிருபத்தினாலாவது நாங்கள்‌ உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக்‌ கைக்‌ கொள்ளுங்கள்‌. 2 தெச 2:15

அப்போஸ்தலனாகிய பவுல்‌, மேற்கண்ட வார்த்தைகளில்‌, இறிஸ்துவுக்குள்‌ தெரிந்து கொள்ளப்பட்டவர்களும்‌, அவருடைய மகிமையைப்‌ பெற அழைக்கப்பட்டவர்களுமாகிய, தெசலோனிக்கேயர்‌ சபையில்‌ ஊழியஞ்செய்கிறவர்களுக்கு போதிக்கிறபடி, நாமும்‌ இந்நாட்களில்‌, இந்த நூலில்‌ விவரித்துள்ளபடி, காலஞ்சென்ற அருமை சகோதரர்‌ பக்த்சிங்‌ அவர்கள்‌, கடந்த அறுபதாண்டுகளில்‌ நமக்குக்‌ கற்றுக்கொடுத்த சத்தியத்தையும்‌, பாரம்பரியங்களையும்‌ ஏற்றுக்கொள்ள வேண்டும்‌.

எனவே, நாம்‌ அவைகளில்‌, தற்போதுள்ள தலைமுறையில்‌ உறுதியாய்‌ நிற்கவும்‌, அவருடைய மகிமையுள்ள சபைக்காக, ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில்‌, நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை சேவிக்கவும்‌ இந்நூலானது ஜெபத்தோடு வெளியிடப்படுகிறது.

எபிரோன்‌ சகோ. கே.பிலிப்‌

ஹைதராபாத்‌

Page 03

ஓ தொடக்க உரை

இந்தக்‌ கல்லின்மேல்‌ என்‌ சபையைக்‌ கட்டுவேன்‌; பாதாளத்தின்‌ வாசல்கள்‌ அதை மேற்கொள்வதிலலை. (மத்‌ 16:18) என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னார்‌.

அப்‌ 2:41,42- ன்படி இந்தப்‌ பணி ஆரம்பிக்கப்பட்டது. "அவனுடைய வார்த்தையைச்‌ சந்தோஷமாய்‌ ஏற்றுக்கொண்டவர்கள்‌ ஞானஸ்நானம்‌ பெற்றார்கள்‌. அன்றையத்‌ தினம்‌ ஏறக்குறைய மூவாயிரம்‌ பேர்‌ சேர்த்துக்‌ கொள்ளப்பட்டார்கள்‌. அவர்கள்‌ அப்போஸ்தலருடைய உபதேசத்திலும்‌, அந்நியோந்நியத்திலும்‌, அப்பம்‌ பிட்குதலிலும்‌, ஜெபம்பண்ணுதலிலும்‌ உறுஇயாய்த்‌ தரித்திருந்தார்கள்‌'”. பரிசுத்த ஆவியானவர்‌ டர்கள்‌ மீது வந்திறங்கின போது சுவிசேஷத்தைப்‌ பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள்‌.

பேதுரு அவர்களை நோக்கி : ஆகையினால்‌, நீங்கள்‌ சிலுவையில்‌ அறைந்த இந்த இயேசுவையே தேவன்‌ ஆண்டவரும்‌ கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல்‌ குடும்பத்தார்‌ யாவரும்‌ நிச்சயமாய்‌ அறியக்கடவர்கள்‌ என்றான்‌. இதை அவர்கள்‌ கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும்‌ மற்ற அப்போஸ்தலரையும்‌ பார்த்து: சகோதரரே, நாங்கள்‌ என்ன செய்யவேண்டும்‌ என்றார்கள்‌.

பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள்‌ மனந்திரும்பி, ஒவ்வொருவரும்‌ பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின்‌ நாமத்தினாலே ஞானஸ்நானம்‌ பெற்றுக்‌ கொள்ளுங்கள்‌, அப்பொழுது பரிசுத்த ஆவியின்‌ வரத்தைப்‌ பெறுவீர்கள்‌. வாக்குத்தத்தமானது உங்களுக்கும்‌, உங்கள்‌ பிளளைகளுக்கும்‌ நம்முடைய தேவனாதிய கர்த்தர்‌

Page 04

வரவழைக்கும்‌ தூரத்தில்‌ உள்ள யாவருக்கும்‌ உண்டாயிருக்கிறது என்று சொல்லி; இன்னும்‌ அநேக வார்த்தைகளாலும்‌ சாட்சி கூறி, மாறுபாடுள்ள இந்தச்‌ சந்ததியை விட்டுவிலகி உங்களை இரட்சத்துக்‌ கொள்ளுங்கள்‌ என்றும்‌ புத்தி சொன்னான்‌.

அவனுடைய வார்த்தையைச்‌ சந்தோஷமாய்‌ ஏற்றுக்‌ கொண்டவர்கள்‌ ஞானஸ்நானம்‌ பெற்றார்கள்‌. அன்றையதினம்‌ ஏறக்குறைய மூவாயிரம்‌ பேர்‌ சேர்த்துக்‌ கொள்ளப்பட்டார்கள்‌. அப்‌ 2:36-41.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவால்‌ ஏற்படுத்தப்பட்ட முதலாவது சபை இது. சபையாக அவர்கள்‌ நடைமுறை வாழ்க்கையில்‌ எதையெல்லாம்‌ பயிற்சி செய்தார்களோ பின்வரும்‌ சந்ததிக்கு அதை மாதிரியாக வைத்துப்‌ போனார்கள்‌.

அவர்கள்‌ அப்போஸ்தலருடைய உ௨பதேசத்திலும்‌, அந்நியோந்நியத்திலும்‌, அப்பம்‌ பிட்குதலிலும்‌, ஜெபம்‌ பண்ணுதலிலும்‌ உறுதியாய்த்‌ தரித்திருந்தார்கள்‌. அப்‌ 2:42

இந்த நான்கு வார்த்தைகளாகிய அப்போஸ்தலர்‌ உபதேசம்‌, அந்நியோந்நியம்‌, அப்பம்‌ பிட்குதல்‌, ஜெபம்‌” இவைகளுக்கு பின்னால்‌ ஆழமான கருத்துகள்‌ உள்ளன. முதல்‌ நூற்றாண்டு சபை இந்த உபதேசங்களில்‌ தீவிரமாய்‌ தரித்திருந்தார்கள்‌.

அவர்கள்‌ ஒருமனப்பட்டவர்களாய்த்‌ தேவாலயத்திலே அநுதினமும்‌ தரித்திருந்து, வீடுகள்‌ தோறும்‌ அப்பம்பிட்டு, மகிழ்ச்சியோடும்‌, கபடமில்லாத இருதயத்தோடும்‌ போஜனம்‌ பண்ணி, தேவனைத்‌ துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும்‌ தயவு பெற்றிருந்தார்கள்‌. இரட்சிக்கப்படு கிறவர்களை கர்த்தர்‌ அநுதினமும்‌ சபையிலே சேர்த்துக்‌ கொண்டு வந்தார்‌. அப்‌ 2:46,47.

ஆதி சபையானது, சிலகாலம்‌ இந்த மாதிரியை பின்பற்றியது. மேலும்‌, இந்த பணியானது நாளுக்குநாள்‌ பெருகி அநேக சபைகள்‌ ஐரோப்பாவிலும்‌

Page 05

ஏற்படுத்தப்பட்டன. ரோமாபுரி சபைகளின்‌ தலைமை இடமானது. சில ஆண்டுகள்‌ கழித்து, ரோமாபுரியில்‌ சக்கரவர்த்தியாக கான்ஸ்டான்டைன்‌ பொறுப்பேற்றார்‌. அவர்‌ மற்ற நாடுகளோடு போரிட்டார்‌. அந்நாட்களில்‌ தமது கனவில்‌ சிலுவையின்‌ தரிசனத்தைக்‌ கண்டார்‌. பின்பு, தான்‌ வெற்றி பெற்றால்‌, கிறிஸ்தவனாக மாறுவதாக தனக்குள்ளே சொல்லிக்‌ கொண்டார்‌. அதேபோல, அவர்‌ போரில்‌ வெற்றி பெற்று, தன்னைக்‌ கிறிஸ்தவனாக மாற்றிக்‌ கொண்டார்‌. ஆனால்‌ மறுபிறப்பின்‌ அனுபவமில்லை. அவர்‌ ஒரு பிற இனத்தவர்‌. உருவ வழிபாட்டை விட்டு, மதத்தை மட்டும்‌ மாற்றிக்‌ கொண்டார்‌. சக்கரவர்த்தியைப்‌ பிரியப்படுத்த, அநேக பிற இனத்தவரான அதிகாரிகளும்‌ குடிமக்களும்‌ (உருவ வழிபாட்டினர்‌) கிறிஸ்தவர்களாயினர்‌.

இந்த மக்கள்‌, உருவ வழிபாடற்ற ஆராதனையில்‌ இருப்திப்படாமல்‌ சக்கரவர்த்தியை ஏதாவது செய்யும்படி வேண்டிக்‌ கொண்டனர்‌. மக்களை திருப்திப்படுத்த சக்கரவர்த்தியும்‌, ரோமாபுரியின்‌ பிஷப்பிடம்‌ கிறிஸ்துவின்‌ பெயரால்‌ ஏதாவது சிலைகளை தேவாலயத்தில்‌ வைக்கச்‌ சொன்னார்‌. இவ்வாறு சிலைகள்‌ வைக்க ஆரம்பித்தனர்‌. (சிலுவையில்‌ அறையப்பட்ட இயேக திறிஸ்துவின்‌ சிலை, இயேசு இறிஸ்துவின்‌ புனித இருதயத்தைக்‌ காட்டும்‌ சிலை, இன்னும்‌ அநேக சிலைகள்‌) மேலும்‌, மற்ற பிற இனத்தவரின்‌ பாரம்பரியங்களும்‌ பழக்க வழக்கங்களும்‌ கொண்டு வரப்பட்டன. பிஷப்பானவர்‌ எல்லாவற்றுக்கும்‌ அதிகாரியாக வந்ததால்‌, ரோமன்‌ கத்தோலிக்கம்‌ நடைமுறைக்கு வந்து உண்மையான சபை மறைந்துவிட்டது. ஆனால்‌, அப்பம்‌ பிட்குதல்‌ என்னும்‌ உபதேசத்தை ஆண்டவரின்‌ இராபோஜனம்‌ என்று பெயரிட்டு அனுசரித்தனர்‌.

சில ஆண்டுகளுக்கு பின்பு, கத்தோலிக்க பாதிரியாரான மார்ட்டின்லூத்தர்‌, ரோமன்‌ கத்தோலிக்க கொள்கைகளுக்கு

Page 06

எதிர்த்து எழுந்தார்‌. அநேகர்‌ அவரைப்‌ பின்பற்றி ரோமன்‌ கத்தோலிக்க வழியிலிருந்து பிரிந்தனர்‌. ஜான்வெஸ்லி போன்ற அநேகர்‌ பிரிந்து வந்து பல மார்க்கப்பிரிவுகளை ஏற்படுத்தினர்‌. ஆனால்‌ பிரிந்து வந்து, ஆண்டவருடைய வார்த்தையின்படி அல்லாமல்‌ ரோமன்‌ கத்தோலிக்க ஆராதனை முறைப்படியே ஆராதனை நடத்தினர்‌. ஆனால்‌ ஆண்டவரின்‌ அநாதி தீர்மானம்‌, அவரது சபைக்காக நிறைவேற்றப்பட வேண்டும்‌. எனவே, ஆண்டவர்‌ அவருடைய ஊழியக்காரர்‌ சகோ. பக்த்சிங்‌ அவர்களைத்‌ தெரிந்தெடுத்து, தம்முடைய ஊழியத்திற்கென்று பயிற்சி கொடுத்து, உண்மையான சபையின்‌ மாதிரியை வெளிப்படுத்தினார்‌. (முதல்‌ நூற்றாண்டின்‌ மாதிரி சபை)

நான்‌ 1958-ம்‌ ஆண்டு மறுபடியும்‌ பிறந்து, 1955-ம்‌ ஆண்டு சகோ. பக்த்சிங்‌ ஐக்கியத்தில்‌ சேர்ந்தேன்‌. நான்‌ தென்னிந்திய திருச்சபையில்‌ இருந்ததால்‌ 6.5.।1. மற்ற சபையின்‌ ஆராதனையைவிட இவர்கள்‌ ஏன்‌ வேறுபாடான ஆராதனையை நடத்துகிறார்கள்‌ என்று அறிய ஆவலுள்ளவனாய்‌ இருந்தேன. ஒருநாள்‌ சகோ. பக்த்சிங்கிடம்‌ இதுபற்றி கேட்டேன்‌. அதற்கு அவர்‌, ''நீ, யாத்‌ 25:40 -ஐ படித்துப்பார்‌. தேவன்‌ மோசேக்கு ஆசரிப்புக்கூடார மாதிரியை காண்பித்து அதன்படி செய்யச்‌ சொன்னார்‌. ஆண்டவர்‌ கட்டளையிட்டபடி எல்லாம்‌ மோசே செய்தார்‌. தேவன்‌ எனக்கு இத்தகைய ஆராதனையின்‌ மாதிரியைக்‌ காண்பித்தார்‌. நான்‌ அதை பின்பற்றுகிறேன்‌” என்றார்‌. இந்த பதில்‌ எனக்கு இருப்தியளிக்க வில்லை.

எனவே, அடுத்த முறை நான்‌ சென்னை சென்றபோது, சென்னையிலுள்ள மூப்பர்களில்‌ ஒருவரும்‌, சகோ. பகத்சிங்‌ - உடன்‌ ஆதிமுதல்‌ இருந்தவருமான காலஞ்சென்ற சகோ. 1... துரைராஜை சந்தித்தேன்‌. அவரிடம்‌, இந்த தரிசனத்தைப்‌ பற்றி சொல்லும்படி கேட்டேன்‌. அவர்‌ முற்றிலுமாக எனக்கு விளக்கி, ''நாங்கள்‌ எதைச்‌ செய்தாலும்‌ ஆணடவருடைய

Page 07

வார்த்தையின்படி செய்கிறோம்‌ எந்று சொன்னார்‌. இந்த உண்மைகளை நானும்‌ பின்பற்றுகிறேன்‌. இது என்னுடைய கடந்த 87 ஆண்டுகளின்‌ அனுப வமாயிருக்கிறது.

காலஞ்சென்ற சகோ. 1... துரைராஜ்‌ எனக்கு உரைத்தபடி, தேவனுடைய வார்த்தைக்குக்‌ கீழ்படிந்ததினால்‌, சபையில்‌ ஏற்பட்ட உயிர்‌ மீட்சியைப்பறறி பின்வரும்‌ பக்கங்களில்‌ விவரித்துள்ளேன்‌.

சகோ. 0.௩. தேவதாஸ்‌ எபிரோன்‌, ஐதராபாத்‌ 4... அழைப்பு

தேவன்‌ சகோ. பக்த்சிங்கை தெரிந்தெடுத்து, இரட்சிப்பை அளித்து, தம்முடைய ஊழியத்திற்கு அழைத்தார்‌. விகவாசத்தினால்‌ ஜீவிக்கும்படி அவரைப்‌ பயிற்றுவித்தார்‌. தேவன்‌, தாம்‌ தீர்மானித்த காலத்தில்‌ அவரை சென்னைக்கு அனுப்பினார்‌. கிறிஸ்துவின்‌ மகிமையான கவிசேஷத்தை பிரசங்கிக்க அநேக திறிஸ்தவ ஆலயங்கள்‌, அவருக்குத்‌ தங்கள்‌ கதவைத்‌ திறந்து கொடுத்தன. ஆண்டவர்‌, தம்‌ இரக்கத்தினாலே, அநேகருடைய உள்ளங்களைத்‌ திறந்தார்‌. அநேக ஆண்களும்‌ பெண்களும்‌ பாவமன்னிப்பைப்‌ பெற்று, ஆண்டவரைத்‌ தங்கள்‌ இருதயங்களில்‌ ஏற்று, மறுபடியும்‌ பிறந்தார்கள்‌.

ஆகவே, சகோ. பகத்சிங்‌, கூட்டத்திற்கு வரும்‌ ஒவ்வொருவரும்‌ தங்கள்‌ சொந்த முழு வேதாகமத்தை தவறாமல்‌ கொண்டு வரும்படி கட்டாயப்படுத்தினார்‌. சிறுபிள்ளைகளும்‌ கூட சொந்த வேதாகமத்தை வைத்திருக்க வேண்டும்‌ என வலியுறுத்தினார்‌. தேவன்‌ அவரிடம்‌, “ஒவ்வொருவருக்கும்‌ வேதாகமம்‌ கொடு, நான்‌ அவர்களோடு பேசுவேன்‌?” என கூறினார்‌. வேதாகமம்‌ இல்லாத அநேகர்‌

Page 08

வேதாகம சங்கத்திற்குச்‌ சென்று முழு வேதாகமத்தை வாங்கினார்கள்‌.

அநேகர்‌ இரட்சிப்பைப்‌ பெற்றுக்கொண்டு, தேவ வசனத்தின்‌ மீது தாகமுள்ளவர்களாக இருந்தனர்‌. ஆகவே தினந்தோறும்‌ ஆலயங்களில்‌ கூடி அவருடைய தாசர்கள்‌ மூலம்‌ தேவ வசனத்தைப்‌ பெற்றுக்கொண்டனர்‌.

ஒருநாள்‌, தேவன்‌ ஞானஸ்நானத்தைப்‌ பற்றி பேசும்படி சகோ. பக்த்சிங்கிற்கு கூறினார்‌. அடுத்த நாள்‌ ஞானஸ்‌ நானத்தைப்‌ பற்றியும்‌, தண்ணீரில்‌ முழுகி ஞானஸ்நான சாட்சி கொடுப்பதின்‌ நன்மையைப்‌ பற்றியும்‌ பேசினார்‌. பறுபடியும்‌ பிறந்தோர்‌ அநேகள்‌ ஞானஸ்நானம்‌ எடுக்க முன்வந்தனர்‌. அதற்கேற்றபடி ஞானஸ்நானம்‌ எடுக்க விரும்பினவர்களுக்கு, அவர்‌ ஞானஸ்நானம்‌ கொடுத்தார்‌. பிற பிரிவுகளைச்‌ சேர்நத சபையின்‌ போதகர்கள்‌ இந்த உபதேசத்தை ஏற்றுக்‌ கொள்ளவில்லை. எனவே, ஞானஸ்நானம்‌ பெற்றோரை ஆலயத்திற்கு புறம்பாக்கி, சகோ. பக்த்சிங்கிற்கும்‌ கதவை அடைத்தனர்‌.

ஆகையால்‌, சகோ. பக்த்சிங்‌ புரசைவாக்கத்தில்‌, வாடகைக்கு ஒரு வீடு எடுத்து அங்கே கூட்டம்‌ நடத்தினார்‌. மறுபடியும்‌ பிறந்து ஞானஸ்நானம்‌ பெற்றோர்‌ கூட்டத்திற்கு வந்து, தேவ வசனத்தைக்‌ கேட்டனர்‌. இந்த பரிசுத்தவான்களுக்கு சகோ. பக்த்சிங்‌ வேத ஆராய்ச்சிக்‌ கூட்டம்‌ நடத்தினார்‌. எல்லோரும்‌ மிகவும்‌ சந்தோஷமாயிருந்தனர்‌.

அப்பம்‌ பிட்குதலின்‌ தரிசனம்‌

ஒரு நாள்‌ காலை தியானத்தில்‌ சகோ. பக்த்சிங்‌ எபேசியர்‌ 8-ம்‌ அதிகாரத்தை வாசித்துக்‌ கொண்டிருந்தார்‌. கர்த்தர்‌ அவரது கவனத்தை வசனம்‌ 11-19 க்குத்‌ இருப்பினார்‌.

எபேசியர்‌ 4:11. மேலும்‌ நாமனைவரும்‌ தேவனுடைய குமாரனைப்‌ பற்றும்‌ விசுவாசத்திலும்‌ அறிவிலும்‌

Page 09

ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின்‌ அளவுக்குத்‌ தக்க பூரண புருஷராகும்‌ வரைக்கும்‌.

வசனம்‌ - 18 பரிசுத்தவான்கள்‌ சீர்பொருந்தும்பொருட்டு, கவிசேஷ ஊழியத்தின்‌ வேலைக்காகவும்‌, கிறிஸ்துவின்‌ சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்‌,

வசனம்‌ - 19 அவர்‌ சலரை அப்போஸ்தலராகவும்‌, சிலரைத்‌ தீர்க்கதரிசி களாகவும்‌, சிலரைச்‌ சுவிசேஷ கராகவும்‌, சிலரை மேய்ப்பராகவும்‌ போதகராகவும்‌ ஏற்படுத்தினார்‌.

இந்த வசனங்கள்‌ மூலம்‌ மறுபடியும்‌ பிறந்த ஒரு மனிதன்‌, பூரணபுருஷனாக வேண்டுமென்பதே தேவனின்‌ வாஞ்சை என்பதை இவர்‌ அறிந்துகொண்டார்‌. ஒருவன்‌ மறுபடியும்‌ பிறந்ததோடு தேவன்‌ திருப்தி அடைவதில்லை. அவன்‌ பூரணபுருஷனாக வேண்டும்‌ என்று விரும்புகிறார்‌. இதற்காக சபையில்‌ அவர்‌ ஏற்படுத்தி வைத்திருக்கிற காரியங்களை 11, 18-ம்‌ வசனங்கள்‌ விவரிக்கின்றன.

இந்த வசனங்களை அவர்‌ இரும்பத்திரும்ப படித்தார்‌. பின்பு ஆண்டவரிடம்‌, ''ஆண்டவரே, நான்‌ ஒரு சுவிசேஷகன்‌. பரிகத்தவான்கள்‌ பூரணராகும்படி என்னை நீர்‌ அழைத்ததாக உம்முடைய வார்த்தை சொல்கிறது. எப்படி நான்‌ இதைச்‌ செய்வது? உம்முடைய கிருபையினாலே நான்‌ கவிசேஷத்தைப்‌ பிரசங்கிக்கலாம்‌; வேத ஆராய்ச்சிக்‌ கூட்டம்‌ நடத்தலாம்‌. ஆனால்‌ எப்படி பரிசுத்தவான்களின்‌ வாழ்க்கையில்‌ பரிபூரணத்தைக்‌ கொண்டு வரமுடியும்‌ ? தயவு செய்து விளக்கவும்‌” என அவர்‌ கண்ணீரோடு ஜெபித்தார்‌. சில நாட்களுக்குப்‌ பின்பு, இதைத்‌ தன்னோடு ஆரம்ப முதல்‌ இருந்தவர்களாகிய சகோ. 1... துரைராஜ்‌, இராஜமணி, டான்மோசஸ்‌, இராஜரத்தினம்‌, நோயல்பேரோ முதலியவர்களிடம்‌ பகர்ந்து கொண்டார்‌. அவர்கள்‌ அனைவரும்‌ ஒரு முழு இரவு ஜெபத்தில்‌ செலவிட தீர்மானித்தனர்‌. எனவே, சென்னையில்‌ பல்லாவாம்‌ ரயில்‌

Page 10

நிலையம்‌ அருகே உள்ள சிறிய குன்றுக்கு சென்றனர்‌. மலையுச்சியில்‌ யாரும்‌ பயன்படுத்தாத மசூதியைக்‌ கண்டனர்‌. எனவே மலையுச்சிக்குச்‌ சென்று, முழு இரவையும்‌ ஜெபத்தில்‌ கழித்தனர்‌. அதிகாலையில்‌ கீழிறங்கி, மலையின்‌, அடிவாரத்தில்‌ வந்து அமர்ந்தனர்‌.

தேவன்‌ சகோ. பக்த்சிங்கை 1கொரி 17-ம்‌ அதிகாரத்தைப்‌ படிக்கச்‌ சொன்னார்‌. எல்லோரும்‌ படித்தனர்‌. சகோ. பக்த்சிங்‌ “நாம்‌ இதை அனுசரிக்கவில்லை. ஆண்டவர்‌ இதை நாம்‌ அனுசரிக்கச்‌ சொல்கிறார்‌?” என்றார்‌. உடனே மற்ற சகோதரரும்‌ தேவன்‌ அதை அனுசரிக்கச்‌ சொன்னால்‌ இப்போதே இதைச்‌ செய்யலாம்‌ '” என்றனர்‌.

உடனே சகோதரன்‌ அருகே இருந்த கல்லைப்‌ புரட்டி, தன்னிடமிருந்த மேல்துண்டை அதன்மேல்‌ விரித்து மூடினார்‌. வேறொருவர்‌ அருகே உள்ள கடைக்குப்‌ போய்‌ ஒரு பன்‌, இரண்டு டம்ளர்‌ எலுமிச்சை சாற்றை வாங்கி வந்தார்‌. அவற்றைக்‌ கல்லின்மீது வைத்தனர்‌. மறுபடியும்‌ 1கொரி 11-ம்‌ அதிகாரத்தை வாசித்தனர்‌. ''என்னை நினைவு கூரும்படி இதைச்‌ செய்யுங்கள்‌?! என்ற சொற்கள்‌ எல்லோருடைய கவனத்தையும்‌ ஈர்த்தன.

அப்போது, ஆண்டவர்‌ தங்களுக்குச்‌ செய்த எல்லாவற்றையும்‌ அவர்கள்‌ நினைவு கூர்ந்தனர்‌. அவர்கள்‌ இருதயங்கள்‌ நன்றியாலும்‌, தொழுகையாலும்‌ நிறைந்தன. அவர்களையும்‌ அறியாமல்‌ ஒருவர்பின்‌ ஒருவர்‌ தேவனைத்‌ தொழுது கொண்டனர்‌. தொழுது கொண்டபோது, மேகம்‌ தங்களை மூடுவதையும்‌, தேவ பிரசன்னத்தையும்‌ உண்மையாய்‌ உணர்ந்தனர்‌. ''இஸ்ரவேலின்‌ துதிகளுக்குள்‌ வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்‌!” சங்‌ 22:3 என்ற வசனத்தின்படி இது உண்மையாகும்‌. தேவனுடைய பிள்ளைகள்‌ ஆராதிக்கும்‌ போது, தேவன்‌ அவர்கள்‌ நடுவில்‌ வாசம்பண்ணுகிறார்‌. இதுவே இந்த சகோதார்களின்‌ அனுபவ மாயிருந்தது. 10

Page 11

மறுபடியும்‌ 1கொரி 17-ஐ வாசித்தனர்‌. “எந்த மனுஷனும்‌ தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில்‌ புத்து, இந்தப்‌ பாத்திரத்தில்‌ பானம்‌ பண்ணக்கடவன்‌'' என்ற 28-ம்‌ வசனத்தின்‌ மூலம்‌ ஆண்டவர்‌ அவர்களுடன்‌ பேசினார்‌.

அவர்களனைவரும்‌ நாம்‌ நல்லவர்களாயிருக்கிறோம்‌. (சுயநீதி) நாம்‌ பக்தியுள்ளவர்கள்‌. சபை பிரிவுகளை விட்டு வந்துள்ளோம்‌. நாம்‌ என்ன ஆராய்ந்து பார்ப்பது . என்று நினைத்தனர்‌. இவ்வசனத்தின்‌ பொருளை விளக்கும்படி சகோ. பக்த்சிங்‌ ஆண்டவரிடம்‌ கேட்டார்‌. பின்பு ஆண்டவர்‌ சங்‌ 139-ஐ படிக்கச்‌ சொன்னார்‌. அவர்கள்‌ அதைப்படித்த போது, கீழ்கண்ட 28, 88-ம்‌ வசனங்களநன்‌ மூலம்‌ தேவன்‌ அவர்களை உணர்த்தினர்‌.

தேவனே, எனனை ஆராய்ந்து, என்‌ இருதயத்தை அறிந்துகொள்ளும்‌; என்னைச்‌ சோதித்து, என்‌ சிந்தனைகளை அறிந்துகொள்ளும்‌. வேதனை உண்டாக்கும்‌ வழி என்னிடத்தில்‌ உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்‌.

எல்லோரும்‌ இதைப்‌ படித்தபோது, இது தாவீது அரசனின்‌ ஜெபம்‌ என்று அறிந்தனர்‌, உடனே யதார்த்தமாக அதை தங்கள்‌ ஜெபமாக மாற்றினர்‌. தேவன்‌ பதிலளித்து, பெருமை, பொறாமை போன்ற தங்களுக்குள்‌ மறைந்திருக்கிற அநேக பாவங்களைச்‌ சுட்டிக்‌ காட்டினார்‌. அப்போது எல்லோரும்‌ அமுது, ஆண்டவரிடமும்‌ ஒருவரோடு ஒருவரும்‌ மன்னிப்பு கேட்டு ஒப்புரவாயினர்‌. இப்போது அவர்கள்‌ தங்களை தேவனுக்கும்‌ மனிதனுக்கும்‌ முன்பாக பரிபூரணடைந்ததாக உணர்ந்தனர்‌.

பின்பு சகோ. பகத்சிங்‌ அப்பத்திறகும்‌, பாத்திரத்திற்கும்‌ நன்றி கூறி அவற்றை அவர்களுடன்‌ பகிர்ந்து கொண்டார்‌. பின்பு ஜெபித்து முடித்தார்‌. ஜெபத்திற்கு பின்பு அனைத்து சகோதரர்களும்‌ தேவனுடைய வார்த்தையின்‌ மேல்‌ புதிய

Page 12

தாகம்‌ கொண்டனர்‌. அவர்கள்‌ சகோ. பக்த்சிங்கை, தேவனுடைய வார்த்தையைப்‌ போதிக்கும்படி கேட்டுக்கொண்டனர்‌. அவர்‌ கருக்கமான செய்தி கொடுத்தபின்பு மகிழ்ச்சியுடன்‌ வீடு திரும்பினர்‌.

அந்த இரவு ஆண்டவர்‌ சகோ. பக்த்சிங்கிடம்‌, ''பரிகத்தவான்களிடம்‌ எப்படி பரிபூரணத்தைக்‌ கொண்டு வருவது என்று நீ என்னிடம்‌ கேட்ட கேள்விக்கு, பல்லாவரம்‌ மலை அடிவாரத்தின்‌ அனுபவம்‌ தான்‌ அதற்கு விடை: நீ உன்னை ஆராய்ந்து பார்த்து தவறுகளை அறிக்கையிட்டு ஒருவரோடொருவர்‌ காரியங்களை சரிசெய்து, நல்மனச்‌ சாட்சியுடன்‌ பந்தியில்‌ பங்கேற்கும்‌ போது நீ பரிபூரண புருஷனாகிறாய்‌, இப்போது புரிகிறதா? என்றார்‌. அதற்கு சகோ. பக்த்சிங்‌ ஆம்‌ ஆண்டவரே, இப்போது புரிந்து கொண்டேன்‌?” என்றார்‌.

தம்முடைய சபையைப்‌ பரிபூரணப்படுத்த தேவ மக்கள்‌ மத்தியில்‌ இம்மாதிரியான ஆராதனை ஒழுங்கை ஏற்படுத்த வேண்டும்‌ என்று தேவன்‌ சகோ. பகத்சிங்‌ அவர்களிடம்‌ கூறினார்‌. மறுபடியும்‌ சகோ. பக்த்சிங்‌ இம்மாதிரியை, சபையில்‌ எப்படி கொண்டு வருவது என்று தெளிவாக காட்டும்படி ஆண்டவரிடம்‌ கேட்டார்‌. பின்பு ஆண்டவர்‌ மிகத்‌ தெளிவாக, தேவனுடைய மக்களை எப்படி பரிபூரணத்துக்குள்‌ நடத்துவது என்று காண்பித்தார்‌. மலையின்‌ மேலே மோசேக்கு ஆசரிப்புக்‌ கூடாரத்தை காண்பித்தது போல (யாத்‌ 25:40) சகோ. பக்த்சிங்கிற்கு சபையின்‌ தரிசனத்தைக்‌ காட்டினார்‌.

ஆண்டவர்‌ சகோ. பக்த்சிங்கிடம்‌, பழைய ஏற்பாட்டுக்‌ காலத்தில்‌ ஆலயத்தில்‌ தேவனுடைய பிள்ளைகள்‌ கூடிய பொழுது, பாடல்‌ பாடி, ஆண்டவரைத்‌ துதித்தனர்‌. சங்‌ 33:1-3. நீதுமான்களே, கர்த்தருக்குள்‌ களிகூருங்கள்‌. துதி செய்வது செம்மையானவர்களுக்குத்‌ தகும்‌. சுரமண்டலத்‌ தினால்‌ கர்த்தரைத்‌ துதித்து, பத்து நரம்பு வீணையினாலும்‌ அவரைக்‌

Page 13

கீர்த்தனம்‌ பண்ணுங்கள்‌. அவருக்குப்‌ புதுப்பாட்டைப்‌ பாடுங்கள்‌. ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய்‌ வாசியுங்கள்‌. சங்‌ 47:6,7 தேவனைப்‌ போற்றிப்‌ பாடுங்கள்‌, பாடுங்கள்‌. நம்முடைய இராஜாவைப்‌ போற்றிப்‌ பாடுங்கள்‌. பாடுங்கள்‌. தேவன்‌ பூமியனைத்திற்கும்‌ இராஜா; கருத்துடனே அவரைப்‌ போற்றிப்‌ பாடுங்கள்‌.

சங்‌ 66:1,2 '' பூமியின்‌ குடிகளே, நீங்கள்‌ எல்லாரும்‌ தேவனுக்கு முன்பாகக்‌ கெம்பீரமாய்ப்‌ பாடுங்கள்‌. அவர்‌ நாமத்தின்‌ மகத்துவத்தைக்‌ தீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின்‌ மகிமையைக்‌ கொண்டாடுங்கள்‌”.

துதியின்‌ பாடல்களுடன்‌ ஆராதனையை ஆரம்பிக்கும்‌ பொருட்டு கர்த்தருடைய நாளிலே தேவனுடைய மக்களைக்‌ கூடிவரச்‌ செய்து எல்லோரும்‌ சேர்ந்து சில பாடல்களைப்‌ பாடச்‌ சொல்‌. பின்பு தனித்தனியே ஆராதிக்க கற்றுக்‌ கொடு. சற்று நேரம்‌ ஒவ்வொருவராக ஆராதக்கட்டும்‌. பின்பு மேஜையைப்‌ பற்றியும்‌, அதில்‌ பங்கு பெறுவது பற்றியும்‌ விவரித்துச்‌ சொல்‌. ஆராதிக்கும்போது, நான்‌ வந்து அவர்கள்‌ நடுவே தங்குவேன்‌. அவர்கள்‌ என்‌ பிரசன்னத்தை உணருவார்கள்‌. எனக்கு பயப்படும்‌ பயத்தை அவர்கள்‌ உள்ளத்தில்‌ வைப்பேன்‌. நீ அவர்களை எச்சரிக்கும்போது, தேவனோடும்‌, மனிதரோடும்‌ காரியங்களை சரி செய்வர்‌. அவர்கள்‌ அறிக்கையிடும்‌ போது நான்‌ மன்னிப்பேன்‌. அவர்கள்‌ பரிபூரணமடைவர்‌. பின்பு தேவ மக்கள்‌ தகுதியுடன்‌ அப்பம்‌ பிட்குதலில்‌ பங்கு பெறச்‌ செய்‌. இப்படியாக சபையில்‌ பரிபூரணத்தைக்‌ கொண்டு வர முடியும்‌.

பின்பு அவர்கள்‌ என்‌ வருகைக்கு ஆயத்தப்படுவர்‌. மேஜையில்‌ தகுதியாகப்‌ பங்கு பெறும்போது, மனசாட்சி சுத்தமாகி, வார்த்தையை இருதயத்தில்‌ ஏற்றுக்‌ கொள்வர்‌. பின்பு செய்தி கொடு. நான்‌ அவர்களோடு பேசுவேன்‌. அவர்கள்‌ எனக்கு பயந்து கீழ்ப்படிவர்‌. சபையானது எனது வருகைக்கு

Page 14

ஆயத்தப்படும்‌. இவ்விதமாக நான்‌ என்‌ சபையைக்‌ கட்டுவேன்‌. நீ என்னுடன்‌ உடன்‌ வேலையாளாயிருப்பாய்‌. நாங்கள்‌ தேவனுக்கு உடன்‌ வேலையாட்களாயிருக்கிறோம்‌); நீங்கள்‌ தேவனுடைய பண்ணையும்‌, தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்‌'”. 1கொரி 3:9.

சகோ. பக்த்சிங்‌, ஆண்டவர்‌ தனக்கு வெளிப்படுத்தியபடி செய்து, சென்னையில்‌ 1947- ஆம்‌ ஆண்டு ஜூலை மாதத்தில்‌ 'யேகோவா-ஷம்மா' என்று அழைக்கப்படும்‌ இடத்தில்‌ சபையை ஆரம்பித்தார்‌. இதுதான்‌ நம்முடைய ஐக்கியத்தின்‌ உண்மையான வரலாறு.

ஒவ்வொரு கர்த்தருடைய நாளிலும்‌ பின்வரும்‌ ஒழுங்கு முறையை நாம்‌ கடைபிடிக்க வேண்டும்‌. முதலாவது ஆராதனை, இரண்டாவது அப்பம்‌ பிட்குதல்‌, மூன்றாவது செய்தி, பின்பு காணிக்கை முடிவில்‌ ஆச€?ர்வாதம்‌. நாம்‌ ஏதோ தந்திரமுள்ள கட்டுக்‌ கதைகளைப்‌ பின்பற்றவில்லை. சகோ. பக்த்சிங்கிற்கு பல்லாவரம்‌ மலையடிவாரத்தில்‌ காட்டப்பட்ட பரம தரிசனத்தையே நாம்‌ பின்பற்று கிறோம்‌. இந்த தரிசனத்துக்குக்‌ கீழ்ப்படிந்து நடைமுறைப்படுத்த அவர்‌ பெருங்‌ கிரயம்‌ செலுத்த வேண்டியிருந்தது. ஆண்டவர்‌ அவரை கனம்‌ பண்ணினார்‌.

இவ்வூழியமானது, இந்தியாவில்‌ மட்டுமின்றி, மற்ற நாடுகளிலும்‌ பரவியது. யாருக்கும்‌ இம்மாதிரியை மாற்ற உரிமையில்லை. நீங்கள்‌ யாராவது (தேவ ஊழியர்‌, மூப்பர்‌, மேய்ப்பர்‌) இம்மாதிரியைப்‌ பின்பற்றவில்லையானால்‌, நீங்கள்‌ தரிசனத்துக்‌ கீழ்ப்படியாததால்‌, ஆண்டவருக்கு கணக்கு கொடுக்க வேண்டும்‌.

ஒருவன்‌ மறுபடியும்‌ பிறந்து பூரண புருஷனாகி அவர்‌ வருகையில்‌ ஏறெடுக்கப்பட ஆயத்தமாக இருக்க வேண்டும்‌ என்பதே நமது ஆண்டவரின்‌ விருப்பம்‌. இதற்காக ஆண்டவர்‌ எல்லாவற்றையும்‌ செய்து முடித்துள்ளார்‌. நாம்‌ தான்‌

Page 15

அவைகளை ஏற்றுக்‌ கொண்டு, பூரணராகி அவர்‌ வருகைக்கு ஆயத்தப்பட வேண்டும்‌. தேவன்‌ தனிப்பட்ட, மற்றும்‌ சபை பூரணமாகுதலையும்‌ விரும்புகிறார்‌. இதற்காக சபையைத்‌ திருவசனத்தைக்‌ கொண்டு தண்ணீர்‌ முழுக்கினால்‌ சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தி, கறைதிரை முதலானவைகள்‌ ஒன்றுமில்லாமல்‌, பரிசுத்தமும்‌ பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக நிலைநிறுத்த விரும்புகிறார்‌. நாம்‌ அவரோடு ஒத்துழைப்போம்‌. அவர்கள்‌ உறுதியாய்த்‌ தரித்திருந்தார்கள்‌. (அப்‌ 2:42) நாமும்‌ உறுதியாய்த்‌ தரித்திருக்க வேண்டும்‌.

ஜீவனுள்ள சபையின்‌ உபதேசங்கள்‌

அப்‌ 2:42 அவர்கள்‌ அப்போஸ்தலருடைய உபதேசத்திலும்‌, அந்நியோந்நியத்திலும்‌, அப்பம்‌ பிட்குதலிலும்‌, ஜெபம்‌ பண்ணுதலிலும்‌ உறுதியாய்த்‌ தரித்திருந்தார்கள்‌.

நான்‌ ஏற்கனவே சொன்னது போல, இச்சொற்களில்‌ ஆழமான கருத்துகள்‌ அட்ங்கியுள்ளன.

1. அப்பொஸ்தலரின்‌ உபதேசம்‌

அவர்கள்‌ அப்போஸ்தலரின்‌ உபதேசத்தில்‌ தரித்திருந்தார்கள்‌. அப்போஸ்தலரின்‌ உபதேசம்‌ என்றால்‌ என்ன ? உபதேசத்தைக்‌ கொடுத்த அப்போஸ்தலன்‌ யார்‌ ? கர்த்தராகிய இயேககிறிஸ்துவே அந்த அப்போஸ்தலர்‌. எபி 3:1 இப்படியிருக்க, பரம அழைப்புக்குப்‌ பங்குள்ளவர்‌ களாகிய பரிசுத்த சகோதரரே. நாம்‌ அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும்‌, பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக்‌ கவனித்துப்‌ பாருங்கள்‌.

இங்கே அப்போஸ்தலர்‌ என்பவர்‌ தேவனால்‌ முழு அதிகாரத்துடன்‌ அனுப்பப்பட்டவர்‌, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தேவனால்‌ அனுப்பப்பட்டவர்‌. தம்முடைய

Page 16

ஒரே பேறான குமாரனாலே நாம்‌ பிழைக்கும்படிக்குத்‌ தேவன்‌ அவரை இவ்வுலகத்திலே அனுப்பினார்‌ யோவான்‌ 4:9. அவர்‌ எல்லா அதிகாரத்தோடும்‌ வந்தார்‌. அவர்‌ மனுஷ குமாரனாயி ருக்கிறபடியால்‌, நியாயத்தீர்ப்புச்‌ செய்யும்படிக்கு அதிகாரத்தையும்‌ அவருக்குக்‌ கொடுத்திருக்கிறார்‌. யோவான்‌ 5:27

அவருடைய உண்மைத்துவம்‌ என்ன? எபி 1:3. இவர்‌ அவருடைய மகிமையின்‌ பிரகாசமும்‌, அவருடைய தன்மையின்‌ சொரூபமுமாயிருக்கிறார்‌. கொலோ 1:15. அவர்‌... சர்வசருஷ்டிக்கும்‌ முந்தினபேறுமானவர்‌. ஆனால்‌, உலதிற்கு இவர்‌ வந்தபோது, யோவான்‌ ஸ்நானகன்‌ அவரை “உலகத்தின்‌ பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டி'* என்றழைத்தான்‌. யோவான்‌ 1:29. தேவன்‌ தம்முடைய குமாரனை மனிதனின்‌ பாவத்திற்காய்‌ பலியாகும்‌ ஆட்டுக்குட்டியாக அனுப்பினார்‌.

அவர்‌ உலதில்‌ வந்த நோக்கம்‌ என்ன ?

நித்திய ஜீவனைக்‌ கொடுக்க (யோவான்‌ 17:2). அவர்‌ நித்திய ஜீவனைக்‌ கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்‌ மேலும்‌ நீர்‌ அவருக்கு அதிகாரம்‌ கொடுத்தீர்‌. குமாரனிடத்தில்‌ விசுவாசமாயிருக்கிறவன்‌ நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்‌. யோவான்‌ 3:36. இவ்வுலகில்‌ அவரின்‌ வாழ்க்கை

அவர்‌ தேவனுடைய வார்த்தைகளைப்‌ பேசினார்‌. யோவான்‌ 3:34. தேவனால்‌ அனுப்பப்பட்டவர்‌, தேவனுடைய வார்த்தைகளைப்‌ பேசுகிறார்‌. தேவன்‌ மனிதோடு பேச விரும்புகிறார்‌. ஆனால்‌ மனிதன்‌ தேவனுடைய சத்தத்தைக்‌ கேட்க விரும்புவதில்லை. யாத்‌ 20:18,19.

ஜனங்கள்‌ எல்லாரும்‌ இடி முழக்கங்களையும்‌, மின்னல்களையும்‌, எக்காளச்‌ சத்தத்தையும்‌, மலை புகைகிறதையும்‌ கண்டார்கள்‌. அதைக்‌ கண்டு ஜனங்கள்‌

Page 17

பின்வாங்கி தூரத்திலே நின்று, மோசேயை நோக்கி நீர்‌ எங்களோடே பேசும்‌. நாங்கள்‌ கேட்போம்‌, தேவன்‌ எங்களோடே பேசாதிருப்பாராக. பேசினால்‌ நாங்கள்‌ செத்துப்‌ போவோம்‌ என்றார்கள்‌.

ஆனால்‌ உபா 18:18-ல்‌ ஆண்டவர்‌ ஒரு வாக்குத்தத்தம்‌ கொடுத்தார்‌. உன்னைப்‌ போல ஒரு தீர்க்கதரிசியை... எழும்பப்‌ பண்ணி... நான்‌ உங்களுக்குக்‌ கற்பிப்பதையெல்லாம்‌ அவர்‌ உங்களுக்குச்‌ சொல்லுவார்‌. அவர்‌ தான்‌ ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. அதை யூதர்கள்‌ புரிந்து கொள்ளவில்லை. ஆனால்‌ சமாரியா ஸ்திரீ புரிந்து கொண்டாள்‌. யோவான்‌ 4:25,26. அந்த ஸ்திரீ அவரை நோக்கி, கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார்‌ என்று அறிவேன்‌. அவர்‌ வரும்போது எல்லாவற்றையும்‌ நமக்கு அறிவிப்பார்‌ என்றாள்‌. அதற்கு இயேசு, உன்னுடனே பேசுகிற நானே அவர்‌ என்றார்‌. அவள்‌ விசுவாசித்து, ஜீவனைப்‌ பெற்று, சாட்சியாக மாறினாள்‌.

அவர்‌ தேவாட்டுக்குட்டியாக மாறினார்‌. நம்முடைய மீறுதல்களினிமித்தம்‌, அவர்‌ காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம்‌ அவர்‌ நொறுக்கப்பட்டார்‌; நமக்குச்‌ சமாதானத்தை உண்டுபண்ணும்‌ ஆக்கினை அவர்‌ மேல்‌ வந்தது; அவருடைய தழும்புகளால்‌ குணமாதிறோம்‌. ஏசா &53:5.

நம்முடைய பாவங்களுக்காக அவர்‌ மரித்தார்‌. ஆனால்‌, மூன்றாம்‌ நாள்‌ உயிர்த்தெழுந்தார்‌. இப்போது உயிருடன்‌ இருக்கிறார்‌ வெளி 1:18. மரித்தேன்‌. ஆனாலும்‌, இதோ, சதாகாலங்களிலும்‌ உயிரோடிருக்கிறேன்‌ என்றார்‌. அவர்‌ உயிருள்ள அப்போஸ்தலர்‌, அவர்‌ எப்போதும்‌ நம்மோடிருக்கிறார்‌. மத்‌ 28:20.

நான்‌ உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும்‌ அவர்கள்‌ கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்‌. இதோ உலகத்தின்‌ முடிவு பரியந்தம்‌ சகல நாட்களிலும்‌ நான்‌

Page 18

உங்களுடனே கூட இருக்கிறேன்‌ என்றார்‌. அவர்‌ உபதேசம்‌ கொடுத்தார்‌. அவர்‌ என்‌ உபதேசம்‌ என்னுடையதாயிராமல்‌, என்னை அனுப்பினவருடைய தாயிருக்கிறது. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவவனெவனோ அவன்‌ இந்த உபதேசம்‌ தேவனால்‌ உண்டாயிருக்கிறது என்று அறிந்து கொள்வான்‌. யோவான்‌ 7:16,17.

தேவனுடைய சத்தம்‌ என்ன ? பிதா வானத்திலிருந்து இவர்‌ என்னுடைய நேச குமாரன்‌. இவரில்‌ பிரியமாயிருக்கிறேன்‌. இவருக்கு செவி கொடுங்கள்‌?” என்று சொன்னார்‌. மத்‌ 17:5. இதுதான்‌ எல்லா மனிதருக்கும்‌ தேவனுடைய சத்தம்‌. எல்லோரும்‌ கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்‌ வார்த்தைகளைக்‌ கேட்டு கீழ்ப்படிய வேண்டும்‌.

அப்‌ 1:8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில்‌ வரும்போது, நீங்கள்‌ பெலனடைந்து, எருசலேமிலும்‌, யூதேயா முழுவதிலும்‌, சமாரியாவிலும்‌, பூமியின்‌ கடைசி பரியந்தமும்‌, எனக்குச்‌ சாட்சிகளாயிருப்பீர்கள்‌ என்றார்‌. (சீடர்கள்‌ ஆண்டவராகிய இயேசு இறிஸ்துவின்‌ வார்த்கைகளுக்கு கழ்ப்படிந்தார்கள்‌. )

உதாரணமாக, அப்‌ 2:23,24 தேவன்‌ நிர்ணயித்திருந்த ஆலோசனையின்‌ படியேயும்‌, அவருடைய முன்னறிவின்படியேயும்‌ ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள்‌ பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில்‌ ஆணியடித்துக்‌ கொலை செய்தீர்கள்‌. தேவன்‌ அவருடைய மரண உபாதிகளின்‌ கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்‌, அவர்‌ மரணத்தினால்‌ கட்டப்பட்டிருக்கக்‌ கூடாதிருந்தது.

பரிசுத்தமும்‌ நீதியுமுள்ளவரை நீங்கள்‌ மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்டு, .... அதற்கு நாங்கள்‌ சாட்சிகளாயிருக்கிறோம்‌, என்று அப்‌ 3:14,15 கூறுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல்‌ கீழ்ப்படிந்தார்‌. அப்‌ 9:20.

Page 19

தாமதமின்றி கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களில்‌ பிரசங்கித்தான்‌. இந்த சீடர்களுக்கு வேதாகமில்லை. அவர்‌ என்ன சொன்னாரோ அதற்கு கீழ்படிந்தார்கள்‌. தற்போது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சரீரத்தில்‌ இல்லை. எனவே, அவருக்குச்‌ செவிகொடுத்து நேப்படிவது எப்படி 2

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்குக்‌ கொடுக்கப்பட்ட பெயர்களில்‌ ஒன்று, தேவனுடைய வார்த்தை. வெளி 19:13 -ல்‌ அவருடைய நாமம்‌ தேவனுடைய வார்த்தை என்பது. தேவனுடைய வார்‌ த்தைக்கு நாம்‌ கீழ்ப்படியும்போது, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்குக்‌ கழ்ப்படிகிறோம்‌. ஆண்டவர்‌ நமக்கு அவரவர்‌ தாய்‌ மொழிகளில்‌ முழு வேதாகமத்தைக்‌ கொடுத்துள்ளார்‌. அதைப்‌ படித்து கீழ்ப்படிய வேண்டும்‌. இதுவே அப்போஸ்தலரின்‌ உபதேசம்‌.

எனவே சகோ. பக்த்சிங்‌ ஒவ்வொருவரும்‌ தங்கள்‌ சொந்த வேதாகமத்தை வைத்திருக்க வேண்டுமென்றும்‌, எங்கு போனாலும்‌ அதை எடுத்துச்‌ செல்ல வேண்டுமெனவும்‌ கூறுவார்‌. வேதாகமத்தை எடுத்துச்‌ சென்றால்‌, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவையே எடுத்துச்‌ செல்கிறோம்‌.

தேவனுடைய வார்த்தையை வாசித்து அதற்குக்‌ கீழ்ப்படிகிறதினால்‌, ஒருவன்‌ பூரணபுருஷனாகிறான்‌. வேத வாக்கியங்களெல்லாம்‌ தேவ ஆவியினால்‌ அருளப்பட்டிருக்கிறது ; தேவனுடைய மனுஷன்‌ தேறினவனாகவும்‌, எந்த நற்கிரியையுஞ்‌ செய்யத்‌ தகுதியுள்ளவனாகவும்‌ இருக்கும்படியாக, அவைகள்‌ உபதேசத்துக்கும்‌, கடிந்து கொள்ளுதலுக்கும்‌, சீர்திருத்தலுக்கும்‌, நீதியை படிப்பிக்குதலுக்கும்‌, பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 8தீமோ 3:16,17.

இயேசு தம்மை விசுவாசத்த யூதர்களை நோக்கி, நீங்கள்‌ என்‌ உபதேசத்தில்‌ நிலைத்திருந்தால்‌ மெய்யாகவே என்‌

Page 20

கஷஷராயிருப்பீர்கள்‌. யோவான்‌ 8:31.

மனுஷர்‌ முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன்‌ எவனோ அவனை நானும்‌ பரலோகத்திலிருக்கிற என்‌ பிதாவின்‌ முன்பாக அறிக்கைபண்ணுவேன்‌. மத்‌ 10:32.

அவர்கள்‌ கீழ்ப்படிந்தார்கள்‌. இதுவே அப்போஸ்தலரின்‌ உபதேசம்‌. இந்த அப்போஸ்தலரின்‌ உபதேசத்தில்‌ உறுதியாய்த்‌ தரித்தருந்தார்கள்‌. நாமும்‌ இந்த உபதேசங்களில்‌ உறுதியாய்த்‌ தரித்திருக்க வேண்டும்‌. காணிக்கை

சகோதரன்‌ பக்த்சிங்‌ இதைப்‌ பறிறி ஆண்டவரிடம்‌ கேட்டார்‌. அவர்‌ ''ஆண்டவரே வேதாகமத்தில்‌ காணிக்கை செலுத்துவதைப்‌ பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. நான்‌ சபையிலே ஒரு யையை எடுத்துக்‌ கொண்டு ஒவ்வொருவரிடமும்‌ காணிக்கைப்‌ பெற விரும்பவில்லை. ஆனால்‌, உம்முடைய பிள்ளைகள்‌ உமக்குக்‌ கொடுக்க விரும்புகிறார்கள்‌. நான்‌ என்ன செய்ய வேண்டும்‌?” என்று கேட்டார்‌. அதற்கு ஆண்டவர்‌ அவரிடம்‌ 8 இராஜா 12:9-ஐ படிக்கச்‌ சொன்னார்‌.

''ஆசாரியனாகிய யோய்தா, ஒரு பெட்டியை எடுத்து, அதின்‌ மூடியிலே ஒரு துவாரமிட்டு, அதைப்‌ பலிபீடத்தண்டையிலே கர்த்தருடைய ஆலயத்தில்‌ ஜனங்கள்‌ உட்பிரவேசிக்கும்‌ வலது பக்கத்தில்‌ வைத்தான்‌; வாசற்படியைக்‌ காக்கிற ஆசாரியர்கள்‌ கர்த்தருடைய ஆலயத்திற்குக்‌ கொண்டுவரப்பட்ட பணத்தை எல்லாம்‌ அதிலே போட்டார்கள்‌”.

இந்த வசனத்தைப்‌ படித்தவுடன்‌ சகோ. பகத்சிங்‌ வேதாகமத்தில்‌ சொன்னபடி ஒரு பெட்டியை செய்து அதை சபையில்‌ வைத்து, சபையார்‌ எல்லாரும்‌ தங்களுடைய காணிக்கையை செலுத்தலாம்‌ என்று சொன்னார்‌. எனவே, நம்முடைய சபையில்‌ எதை செய்தாலும்‌ ஆண்டவருடைய வார்த்தையின்படியே செய்கிறோம்‌.

Page 21

2. அந்நியோந்நியம்‌

ஒருவர்‌ தனியாக ஐக்கியம்‌ கொள்ள முடியாது. இருவர்‌ அல்லது மூவர்‌ கூடும்போது ஐக்கியம்‌ ஏற்படுகிறது. ஐக்கியம்‌ என்றால்‌ சபை. சபை என்றால்‌ என்ன? 41கொரி 1:2-ல்‌ அப்போஸ்தலனாகிய பவுல்‌, ''கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள்‌ பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும்‌, பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்ட வர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கு” என்று எழுதுகிறார்‌.

மறுபடியும்‌ பிறந்தவர்கள்‌ கூடி வரும்போது அந்தக்‌ கூட்டமே சபை என அழைக்கப்படுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல்‌ சபைக்கு பல பெயர்களைக்‌ கொடுத்துள்ளார்‌.

7. சபை எபேசியர்‌ 1:23

2. அவருடைய சரீரம்‌ எபேசியர்‌ 1:23

8. தேவனுடைய வீட்டார்‌ எபேசியர்‌ 2:19

4. தேவனுடைய ஆலயம்‌ எபேசியர்‌ 2:21

8. தேவனுடைய வாசஸ்தலம்‌ எபேசியர்‌ 2:22

6. தேவனுடைய மந்தை அப்‌ 20:28

சபையிலுள்ள தேவனுடைய ஜனங்கள்‌ ஒருமனப்பாட்டுடன்‌ இருக்கின்றர்‌. 'நீங்களெல்லாரும்‌ கிறிஸ்து இயேசுவைப்‌ விசுவாசத்தினால்‌ தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே என்று கலாத்தியர்‌ 3:26-ல்‌ கூறப்பட்டுள்ளது. இது ஒரு விநோதமான ஐக்கியம்‌. அப்போஸ்தலனாகிய பவுல்‌ சபையின்‌ ஒழுங்கு முறைகளை விவரிக்க ''கிறிஸ்துவின்‌ சரீரம்‌” என்ற சொல்லை பயன்படுத்துகிறார்‌. கொலோ 1:18-ல்‌ கிறிஸ்துவே சபையாஇிய சரீரத்துக்குத்‌ தலையானவர்‌; எல்லாவற்றிலும்‌ முதல்வராயிருக்கும்படி அவரே ஆதியும்‌ மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்‌ என்றும்‌, கொலோ 1:19-ல்‌ சகல பரிபூரணமும்‌ அவருக்குள்ளே வாசமாயிருக்கிறது என்றும்‌,

Page 22

கொலோ 2:9-ல்‌ தேவத்துவத்தின்‌ பரிபூரணமெல்லாம்‌ சரீரப்‌ பிரகாரமாக அவருக்குள்‌ வாசமாயிருக்கிறது என்றும்‌ கூறப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும்‌ எல்லாவற்றாலும்‌ நிரப்புகிறவருடைய நிறைவாதிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிகும்‌ மேலான தலையாகத்‌ தந்தருளினார்‌ என்று எபே 1:23-ல்‌ வாசிக்கிறோம்‌.

சபை அவருடைய சரீரம்‌. மனிதனின்‌ சரீரத்தில்‌ அநேக அவயவங்கள்‌ இருக்கின்றன. சகல அவயவங்களும்‌ சிரசின்‌ ஆளுகைக்குட்பட்டிருக்கின்றன. அவயவங்கள்‌ அனைத்தும்‌ தங்கள்‌ தங்கள்‌ கடமைகளை செவ்வனே செய்வதால்‌, முழு சரீரமானது அவருக்குக்‌ கீழ்படிந்திருக்க வேண்டும்‌. எபே 8884-ல்‌ சபையானது கிறிஸ்துவுக்குக்‌ கழ்ப்படிகிறது '”. என்று கூறப்பட்டிருக்கிறது.

சபையை கறைதிரையற்ற, மகிமையான (பரிபூரணமான) சபையாக நிலைநிறுத்துவதே தேவனுடைய விருப்பமாகும்‌. அப்போஸ்தலனாகிய பவுலின்‌ வாஞ்சை என்ன? எந்த மனுஷனையும்‌, கிறிஸ்து இயேசுவுக்குள்‌ பூரண புருஷனாக நிறுத்துவதே. கொலோ 1:28. முதலாவது தனி மனிதனின்‌ பரிபூரணம்‌. பின்பு முழு சபையாக பரிபூரணமடைதல்‌. இந்த நோக்கத்திற்காக தேவன்‌ எல்லாவற்றையும்‌ ஏற்படுத்தி வைத்திருக்கிறார்‌. மனிதன்‌ தானாகவே பரிபூரணமடைய முடியாது. மனிதனுக்கு இரட்சிப்பை கொண்டு வரமுடியும்‌. எபே 4:12,13-ன்படி பரிசுத்தவான்கள்‌ சீர்பொருந்தும்‌ பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின்‌ வேலைக்காகவும்‌, இிறிஸ்துவின்‌ சரீரமாகிய சபையானது பக்தி விருத்தி அடைவதற்காகவும்‌, அவர்‌ சிலரை அப்போஸ்தலராகவும்‌, சிலரைத்‌ தீர்க்கதரிசிகளாகவும்‌, சிலரைச்‌ சுவிசேஷகராகவும்‌, சிலரை மேய்ப்பராகவும்‌ போதகராகவும்‌ ஏற்படுத்தினார்‌.

அப்போஸ்தலர்‌, தீர்க்கதரிசிகள்‌, சுவிசேஷகர்‌ ஆகியோர்‌ தேவ ஊழியக்காரர்‌ ஆவர்‌. மேய்ப்பர்கள்‌, போதகர்கள்‌

Page 23

ஆதஇயோர்‌ மூப்பர்கள்‌ ஆவர்‌. (அப்‌ 20:17,28). தேவ ஊழியர்களும்‌ மூப்பர்களும்‌ மந்தைக்கு மேய்ப்பர்களாயிருப்ப தினால்‌, பரிசுத்தவான்கள்‌ பரிபூரணப்படவும்‌, தேவனுடைய ஊழியம்‌ நிறைவேறவும்‌ இணைந்து செயல்பட வேண்டும்‌. இதுவே தேவனின்‌ சத்தம்‌. ஆனால்‌ இந்நாட்களில்‌ தேவ ஊழியரும்‌ மூப்பரும்‌ ஒருவருக்கொருவர்‌ கருத்து வேறுபாடு கொள்வதினால்‌, தேவ ஊழியம்‌ சீர்கெட்டுப்‌ போகிறதைக்‌ காண்கிறோம்‌. தேவன்‌, இவர்களைத்‌ தம்முடைய வேலைக்காக ஒன்றாக இணைத்துள்ளார்‌. இவர்கள்‌ ஒன்றாக சேர்ந்து உழைத்தால்‌, பரிசுதவான்களின்‌ வாழ்க்கையில்‌ பரிபூரணத்தைக்‌ கொண்டு வருவர்‌; சரீரமும்‌ பக்தி விருத்தியடையும்‌. மேய்ப்பர்களின்‌ கடமை

பேதுரு 5:1-3-ல்‌ உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்‌ மூப்பனும்‌, கிறிஸ்துவின்‌ பாடுகளுக்குச்‌ சாட்சியும்‌, இனி வெளிப்படும்‌ மகிமைக்குப்‌ பங்காளியுமாயிருக்கிற நான்‌ புத்தி சொல்லுகிறதென்னவென்றால்‌: உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள்‌ மேய்த்து... மந்தைக்கு மாதிரிகளாகவும்‌, கண்காணிப்புச்‌ செய்யுங்கள்‌ என்று எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள்‌ தங்கள்‌ கடமையை உண்மையாய்‌ செய்ய வேண்டும்‌. அப்பொழுது வெகுமதியைப்‌ பெறுவார்கள்‌. 1பேதுரு 5:4-ன்‌ படி பிரதான மேய்ப்பர்‌ வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத இரீடத்தைப்‌ பெறுவீர்கள்‌. 1. பரிசுத்தவான்களின்‌ ( மந்தை) கடமை

தேவவசனத்தை உங்களுக்குப்‌ போதித்து உங்களை நடத்தினர்வகளை நீங்கள்‌ நினைத்து, அவர்களுடைய நடக்கையின்‌ முடிவை நன்றாய்ச்‌ சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப்‌ பின்பற்றுங்கள்‌. எபி 13:7

உங்களை நடத்துகிறவர்கள்‌, உங்கள்‌ ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்‌ பண்ணுகிறவர்களாய்‌ விழித்திருக்கிற

Page 24

வர்களானபடியால்‌, அவர்கள்‌ துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்‌ செய்யும்படி அவர்களுக்குக்‌ கீழ்படிந்து அடங்குங்கள்‌; அவர்கள்‌ துக்கத்தோடே அப்படிச்‌ செய்தால்‌ அது உங்களுக்குப்‌ பிரயோஜனமாயி ருக்கமாட்டாதே. எபி 13:17

அன்றியும்‌ சகோதரரே, உங்களுக்குளளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள்‌ உங்களை விசாரணை செய்கிறவர்‌ களாயிருந்து, உங்களுக்குப்‌ புத்தி சொல்லுகிறவர்களை நீங்கள்‌ மதித்து அவர்களுடைய இரியையினிமித்தம்‌ அவர்களை மிகவும்‌ அன்பாய்‌ எண்ணிக்‌ கொள்ளும்படி உங்களை வேண்டிக்‌ கொள்ளுகிறோம்‌. உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்‌. 1தெச 8;18,19.

2. ஒருமனமுள்ளவராய்‌ வாழுங்கள்‌. 4:1-3

(௮) முதலாவது தேவனோடு ஐக்கியமாக வேண்டும்‌. நீங்கள்‌ மறுபடியும்‌ பிறந்தவர்கள்‌. ஆனால்‌, தேவனோடு தொடர்ந்து ஐக்கியம்‌ கொண்டிருக்க வேண்டும்‌. தாவீது இந்த ஐக்கியத்தை வாஞ்சித்தான்‌. கர்த்தாவே, உமது வழியை எனக்குப்‌ போதியும்‌, நான்‌ உமது சத்தியத்திலே நடப்பேன்‌; நான்‌ உமது நாமத்திற்குப்‌ பயந்திருக்கும்படி என்‌ இருதயத்தை ஒருமுகப்படுத்தும்‌ சங்‌ 86:11. தேவன்‌ நம்மை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவோடு ஒன்றாக இணைத்திருக்கிறார்‌. அவரோடு உயிர்ப்பித்துமிருக்கிறார்‌. எபே 2:1. அவரோடுகூட எழுப்பி உன்னதங்களில்‌ உட்காரவும்‌ செய்தார்‌. எபே 2:7. நாம்‌ இந்த சத்தியத்தை அறிந்து, இந்த ஐக்கியத்தையும்‌ ஒருமனப்பாட்டையும்‌ அனுபவிக்க வேண்டும்‌.

(ஆ) ஒருவரோடொருவர்‌ ஐக்கியமுள்ளவர்களாய்‌ இருக்க வேண்டும்‌. ஆதலால்‌ கர்த்தர்‌ நிமித்தம்‌ கட்டுண்டவனாதிய நான்‌ உங்களுக்குச்‌ சொல்லுகிறேன்‌... சமாதானக்‌ கட்டினால்‌ ஆவியின்‌ ஒருமையைக்‌ காத்துக்‌ கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்‌. எபே 4:1-3

Page 25

இது கிறிஸ்துவின்‌ சரீரமாகிய சபையில்‌ பக்தி விருத்தியை உண்டாக்கு கிறது. இதோ, சகோதரர்‌ ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும்‌, எத்தனை இன்பமுமானது. சங்‌ 133:1. அங்கே வேற்றுமை இராது. சபை பரிபூரணப்‌ படும்‌. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின்‌ நற்கந்தம்‌ வெளியிலே வீசும்‌. இறுதியிலே ஆண்டவர்‌ மகிமையுள்ள சபையாக நிலை நிறுத்துவார்‌. இது தான்‌ சபையின்‌ ஒழுங்கு. இதுவே ஐக்கியம்‌. அவர்கள்‌ அந்நியோந்நியத்திலே உறுதியாய்த்‌ தரித்திருந்தார்கள்‌. நாமும்‌ அவ்வாறு உறுதியாய்த்‌ தரித்திருக்க வேண்டும்‌.

3. அப்பம்‌ பிட்குதல்‌

லூக்கா 22:13-20 அவர்கள்‌ போய்‌, தங்களிடத்தில்‌ அவர்‌ சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்‌ பண்ணினார்கள்‌. வேளை வந்தபோது, அவரும்‌ அவருடனேகூடப்‌ பன்னிரண்டு அப்போஸ்தலரும்‌ பந்தியிருந்தார்கள்‌. அப்பொழுது அவர்‌ அவர்களை நோக்கி: நான்‌ பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப்‌ பஸ்காவைப்‌ புசிக்க மிகவும்‌ ஆசையாயிருந்தேன்‌. தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும்‌ நான்‌ இனி இதைப்‌ புசிப்பதில்லையென்று உங்களுக்கு சொல்லுகிறேன்‌ என்று சொல்லி, அவர்‌ பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்‌ பண்ணி நீங்கள்‌ இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக்‌ கொள்ளுங்கள்‌, தேவனுடைய ராஜ்யம்‌ வருமளவும்‌ நான்‌ திராட்சபழ ரசத்தைப்‌ பானம்‌ பண்ணுவதில்லையென்று உங்களுக்குச்‌ சொல்லுகிறேன்‌ என்றார்‌. பின்பு அவர்‌ அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப்பிட்டு அவர்களுக்குக்கொடுத்து; இது உங்களுக்காகக்‌ கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச்‌ செய்யுங்கள்‌ என்றார்‌. போஜனம்பண்ணின பின்பு அவர்‌ அந்தப்படியே பாத்திரத்தையும்‌ கொடுத்து: இந்தப்‌ பாத்திரம்‌

Page 26

உங்களுக்காகச்‌ சந்தப்படுகிற என்னுடைய இரத்தத்‌ தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்‌. 1கொரி 11:23-32 நான்‌ உங்களுக்கு ஒப்புவித்ததைக்‌ கர்தரிடத்தில்‌ பெற்றுக்‌ கொண்டேன்‌; என்னவெனில்‌, கர்த்தராகிய இயேசு தாம்‌ காட்டிக்‌ கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்‌ பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள்‌ வாங்கிப்‌ புசியுங்கள்‌, இது உங்களுக்காகப்‌ பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது ; என்னை நினைவுகூரும்படி இதைச்‌ செய்யுங்கள்‌ என்றார்‌. போஜனம்பண்ணின பின்பு, அவர்‌ அந்தப்படியே பாத்திரத்தையும்‌ எடுத்து: இந்தப்‌ பாத்திரம்‌ என்‌ இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்ை கயாயிருக்கிறது ; நீங்கள்‌ இதைப்‌ பானம்‌ பண்ணும்போதெல்லாம்‌ என்னை நினைவுகூரும்படி இதைச்‌ செய்யுங்கள்‌ என்றார்‌. ஆகையால்‌, நீங்கள்‌ இந்த அப்பத்தைப்‌ புசித்து, இந்தப்‌ பாத்திரத்தில்‌ பானம்‌ பண்ணும்போதெல்லாம்‌ கர்த்தர்‌ வருமளவும்‌ அவருடைய மரணத்தைத்‌ தெரிவிக்கிறீர்கள்‌. இப்படியிருக்க, எவன்‌ அபாத்திரமாய்க்‌ கர்த்தருடைய அப்பத்தைப்‌ புசித்து, அவருடைய பாத்திரத்தில்‌ பானம்பண்ணுகிறானோ, அவன்‌ கர்த்தருடைய சரீரத்தையும்‌ இரத்தத்தையும்‌ குறித்துக்‌ குற்றமுள்ளவனாயிருப்பான்‌. எந்த மனுஷனும்‌ தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தை புசித்து, இந்தப்‌ பாத்திரத்தில்‌ பானம்‌ பண்ணக்கடவன்‌. என்னத்தினாலெனில்‌, அபாத்திரமாய்ப்‌ போஜனபானம்‌ பண்ணுகிறவன்‌, கர்த்தருடைய சரீரம்‌ இன்னதென்று நிதானித்து அறியாததினால்‌, தனக்கு ஆக்கினைத்‌ தீர்ப்பு வரும்படி போஜனபானம்‌ பண்ணுகிறான்‌. இதினிமித்தம்‌, உங்களில்‌ அநேகர்‌ பலவீனரும்‌ வியாதியுள்ள வர்களுமாயிருக்கி றார்கள்‌. அநேகர்‌ நித்திரையும்‌ அடைந்திருக்கிறார்கள்‌. நம்மை நாமே நிதானித்து அறிந்தால்‌ 26

Page 27

நாம்‌ நியாந்தீர்க்கப்படோம்‌. நாம்‌ நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத்‌ தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சட்சிக்கப்படுகிறோம்‌.

இது நமக்கு முதல்‌ பஸ்கா பண்டிகையை நினைவுபடுத்துகிறது. யாத்‌ 12:8-11. அன்று இராத்திரியிலே அதின்‌ மாம்சத்தை நெருப்பினால்‌ சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும்‌ கசப்பான கீரையோடும்‌ அதைப்‌ புசிக்கக்கடவர்கள்‌. பச்சையாயும்‌ தண்ணீரில்‌ அவிக்கப்பட்டதாயும்‌ அல்ல; அதின்‌ தலையையும்‌ அதின்‌ தொடைகளையும்‌ அதற்குள்ள யாவையும்‌ ஏகமாய்‌ நெருப்பினால்‌ சுட்டதாய்‌ அதைப்‌ புசிப்பீர்களாக. அதிலே ஒன்றையும்‌ விடியற்காலம்‌ மட்டும்‌ மீதியாக வைக்காமல்‌, விடியற்காலம்‌ மட்டும்‌ அதிலே மீதியாய்‌ இருக்கிறதை அக்கினியால்‌ சுட்டெரிப்பீர்களாக. அதைப்‌ புசிக்க வேண்டிய விதமாவது, நீங்கள்‌ உங்கள்‌ அரைகளில்‌ கச்சை கட்டிக்கொண்டும்‌, உங்கள்‌ கால்களில்‌ பாதரட்சை தொடுத்துக்‌ கொண்டும்‌, உங்கள்‌ கையில்‌ தடி பிடித்துக்‌ கொண்டும்‌ அதைத்‌ தவிரமாய்ப்‌ புசிக்கக்கடவீர்கள்‌; அது கர்த்தருடைய பஸ்கா.

இது மூன்று காரியங்களை நமக்கு நினைப்பூட்டுகிறது.

1. மீட்பு (அடிமைத்தனத்திலிருந்து)

2. விடுதலை (எஇப்திலிருந்து)

3. தேவனுக்கு ஊழியஞ்செய்ய (யாத்‌ 8:1; 9:1)

தேவனுடைய ஜனங்கள்‌ தலைமுறைதோறும்‌ இதை ஆசரிக்க வேண்டும்‌. ஆனால்‌ யோசுவாவின்‌ காலம்‌ வரை இதை ஆசரித்தார்கள்‌. யோசு 5:10. இஸ்ரவேல்‌ புத்திரர்‌ இல்காலில்‌ பாளயமிறங்கியிருந்து, மாதத்தின்‌ பதினாலாம்‌ தேதி அந்திநேரத்திலே எரிகோவின்‌ சமனான வெளிகளிலே பஸ்காவை ஆச?ரித்தார்கள்‌. பின்பு அதை விட்டு விட்டார்கள்‌. பஸ்கா ஆட்டுக்குட்டி உண்மையான தேவ ஆட்டுக்குட்டியானவருக்கு நிழலாயிருக்கிறது. இந்த

Page 28

பண்டிகை தொடர்ந்து ஆசரிக்கப்பட வேண்டும்‌. ஆகையால்‌, தேவன்‌ எசேக்கியா ராஜாவோடு பேசினதினால்‌, அவன்‌ மறுபடியும்‌ பஸ்கா பண்டிகையை ஆசரிக்கத்‌ தொடங்கினான்‌.

நாளா 30:5-ல்‌ எழுதியிருக்கிறபடி வெகுகாலமாய்‌ அவர்கள்‌ அதை ஆசரிக்கவில்லை. ஆகையால்‌ இஸ்ரவேலின்‌ தேவனாகிய கர்த்தருக்குப்‌ பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமுக்கு வாருங்கள்‌ என்று பெயர்செபா முதல்‌ தாண்‌ மட்டுமுள்ள இஸ்ரவேல்‌ தேசமெங்கும்‌ பறைசாற்றுவிக்கத்‌ தீர்மானம்‌ பண்ணினார்கள்‌. இது முதல்‌, பஸ்கா பண்டிகை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்‌ காலம்‌ வரையில்‌ தொடர்ந்து ஆசரிக்கப்பட்டு வந்தது. இயேசு கிறிஸ்து கடைசி பஸ்காவை ஆசரித்தார்‌. பஸ்கா பண்டிகையை ஆசரிக்கும்‌ நியமங்களும்‌ ஒழுங்கு முறையும்‌ யாத்‌ 12:1-44 வசனங்களில்‌ தெளிவாக உரைக்கப்பட்டுள்ளன. புதிய ஏற்பாடு சபைகளில்‌ நாம்‌ அப்பம்‌ பிட்டு ஆராதனை செய்ய கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கை அப்பேஸ்தலனாகிய பவுல்‌ 1கொரி 11:23-32 வசனங்களில்‌ விளக்கியுள்ளார்‌. இதுவும்‌ ஒரு நினைவுகூருதலின்‌ பண்டிகையாயிருக்கிறது. பஸ்கா: ஒரு ஆட்டுக்குட்டி அடித்து புசிக்கப்பட்டது. அப்பம்‌ பிட்குதல்‌: பலியான பரலோக தேவாட்டுக்‌ குட்டியை நினைவுகூருதல்‌. ''ஆகையால்‌, நீங்கள்‌ புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப்‌ பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவைப்‌ புறம்பே கழித்துப்போடுங்கள்‌. ஏனெனில்‌ நம்முடைய பஸ்காவாகிய இறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே''. (கொரி 5:7)

இந்த ஆட்டுக்குட்டியும்‌ புசிக்கப்பட வேண்டும்‌. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து யோவான்‌ 6:51-56 வசனங்களில்‌ நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்‌; இந்த அப்பத்தைப்‌ புசிக்கிறவன்‌ என்றென்றைக்கும்‌ பிழைப்பான்‌; நான்‌ கொடுக்கும்‌ அப்பம்‌ உலகத்தின்‌ ஜீவனுக்காக நான்‌ கொடுக்கும்‌ என்‌ மாம்சமே என்றார்‌. அப்பொழுது யூதர்கள்‌; இவன்‌

Page 29

தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப்‌ புசக்கக்‌ கொடுப்பான்‌ என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்‌ பண்ணினார்கள்‌. அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள்‌ மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப்‌ புசியாமலும்‌, அவருடைய இரத்தத்தைப்‌ பானம்பண்ணாமலும்‌ இருந்தால்‌ உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச்‌ சொல்லுகிறேன்‌. என்‌ மாம்சத்தைப்‌ புசித்து, என்‌ இரத்தத்தைப்‌ பானம்‌ பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன்‌ உண்டு; நான்‌ அவனை கடைசி நாளில்‌ எழுப்புவேன்‌. என்‌ மாம்சம்‌ மெய்யான போஜனமாயிருக்கிறது. என்‌ இரத்தம்‌ மெய்யான பானமாயிருக்கிறது. என்‌ மாம்சத்தைப்‌ புசித்து, என்‌ இரத்தத்தைப்‌ பானம்பண்ணுகிறவன்‌ என்னிலே நிலைத்திருக்கிறான்‌. நானும்‌ அவனிலே நிலைத்திருக்கிறேன்‌'” என்று கூறுகிறார்‌.

சாதாரண அப்பம்‌ : மாம்ச சரீரத்தைப்‌ பேணிக்காக்க

ஜீவ அப்பம்‌ : ஆவிக்குரிய சரீரத்தை போஷிக்க,

ஆண்டவர்‌ என்னை நினைவு கூரும்படி இதைச்‌ செய்யுங்கள்‌ என்றார்‌. 1கொரி 11:24,25.

நாம்‌ பங்குபெறும்போது மூன்று காரியங்களை அறிவிக்கிறோம்‌.

1. நான்‌ மீட்கப்பட்டிருக்கிறேன்‌. எபே 1:7, கொலோ 1:14

2. நான்‌ விடுதலை பெற்றிருக்கிறேன்‌. எபே 1:12, கலா 5:1

8. நான்‌ ஆண்டவருக்கு ஊழியஞ்‌ செய்கிறேன்‌. 1கொரி 11:26

இது ஒரு பாரம்பரியமல்ல, இது ஒரு சாட்சியாகும்‌.

யார்‌ புசிக்க வேண்டும்‌ ? : மறுபடியும்‌ பிறந்தவர்கள்‌ மட்டும்‌ புசிக்க வேண்டும்‌. அந்நியன்‌ (அவிசுவாசி) புசிக்கக்‌ கூடாது.

எப்படி புசிக்க வேண்டும்‌ ? : புளிப்பில்லாத அப்பத்தோடு புசிக்க வேண்டும்‌. ஆதலால்‌ பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம்‌, பொல்லாப்பு என்னும்‌ புளித்தமாவோடும்‌ அல்ல, துப்புரவு உண்மை என்னும்‌ புளிப்பில்லாத

Page 30

அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்‌. 1கொரி 5:8

இருவிதமான புளிப்பு. மத்‌ 16:6. இயேசு அவர்களை நோக்தி: பரிசேயர்‌ சதுசேயர்‌ என்பவர்களின்‌ புளித்த மாவைக்‌ குறித்து எச்சரிக்கையாயிருங்கள்‌ என்றார்‌.

௮) பரிசேயரின்‌ புளித்தமா : லூக்‌ 12:1 ...நீங்கள்‌ மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்‌ குறித்து எச்சரிக்கையாயிருங்கள்‌.

மாய்மாலம்‌ : தேவன்‌ மாய்மாலத்தை வெறுக்கிறார்‌. மத்‌ 23:13,15 ...மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ!”

ஆ) சதுசேயரின்‌ புளித்தமா : உயிர்த்தெமுதலில்‌ நம்பிக்கை இல்லாதவர்கள்‌. அப்‌ 23:8

ஆண்டவருடைய பந்தியில்‌ பங்கு பெறும்போது நாம்‌ கொடுக்கிற சாட்சி என்னவெனில்‌ :

1. நான்‌ மீட்கப்பட்டுள்ளேன்‌. என்‌ வாழ்க்கை

தூய்மையாயுள்ளது.

2. நான்‌ சபை ஏறெடுத்துக்‌ கொள்ளப்படும்‌ சம்பவத்திற்கு

ஆயத்தமாயிருக்கிறேன்‌.

ஆகையால்தான்‌ நாம்‌ கர்த்தருடைய பந்தியை ஆசரிக்கும்‌ முன்‌ நம்‌ வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்து, தேவனோடும்‌ மனிதனோடும்‌ காரியங்களைசரி செய்து கொள்ள வேண்டும்‌. 1கொரி 11:28,29. நாம்‌ ஆண்டவருடைய வருகைக்கு ஆயத்தமாயிருக்கிறோம்‌ என சாட்சி கூறுகிறோம்‌. பரிபூரணமாயி ருக்கிறோம்‌ என அறிக்கையிடுகிறோம்‌.

அப்பத்தைப்‌ பங்கிடுவது எப்படி ? லூக்‌ 22:17

மற்ற சபைப்‌ பிரிவுகளில்‌ சபை போதகரே அப்பத்தைப்‌ பங்கிடுவார்‌. ஆனால்‌ இது தேவனுடைய வார்த்தையின்படி அல்ல. ''இதை உங்களுக்குள்ளே நீங்களே பங்கிட்டுக்‌ கொள்ளுங்கள்‌?” என்று ஆண்டவர்‌ சொன்னார்‌. ஏனெனில்‌, எல்லாரும்‌ அவருக்கு முன்பு சமம்‌.

Page 31

எனவே, நாம்‌ எதைச்‌ செய்தாலும்‌ தேவனுடைய வார்த்தையின்படியே செய்து, கர்த்தருடைய பந்தியில்‌ பங்கு பெறும்போது நம்‌ நம்பிக்கையை அறிவிக்கிறோம்‌. யோவான்‌ 14:2,3. நான்‌ போய்‌ உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணின பின்பு, நான்‌ இருக்கிற இடத்திலே நீங்களும்‌ இருக்கும்படி நான்‌ மறுபடியும்‌ வந்து உங்களை என்னிடத்தில்‌ சேர்த்துக்‌ கொள்ளுவேன்‌.

அவர்கள்‌ அப்பம்‌ பிட்குதலில்‌ உறுதியாய்த்‌ தரித்திருந்தார்கள்‌. நாமும்‌ உறுதியாய்த்‌ தரித்திருக்க வேண்டும்‌.,

4. ஜெபம்‌

அப்‌ 2:42, எபே 6:10-20

நாம்‌ ஜெபத்தின்‌ மூலம்‌ தேவனோடு உறவாடுதகிறோம்‌. முன்பு நம்முடைய பாவத்தினாலே தேவனை விட்டுப்‌ பிரிக்கப்பட்டிருந்தோம்‌.

இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக்‌ கர்த்தருடைய கை குறுகிப்‌ போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை, உங்கள்‌ அக்கிரமங்களே உங்களுக்கும்‌ உங்கள்‌ தேவனுக்கும்‌ நடுவாகப்‌ பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள்‌ பாவங்களே, அவர்‌ உங்களுக்குச்‌ செவி கொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. ஏசா 59:1,2

ஆனால்‌, ஆண்டவராகிய இயேசு இறிஸ்துவின்‌ இரத்தத்தினாலே நாம்‌ தேவனுக்குச்‌ சமீபமானோம்‌. நாம்‌ புத்திர சுவீகாரம்‌ பெற்றுள்ளோம்‌.

ரோமர்‌ 8:15 அந்தப்படி, இரும்பவும்‌ பயப்படுகிறதற்கு நீங்கள்‌ அடிமைத்‌ தனத்தின்‌ ஆவியைப்‌ பெறாமல்‌, அப்பா பிதாவே, என்று கூப்பிடப்‌ பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின்‌ ஆவியைப்‌ பெற்றீர்கள்‌. நாம்‌ இப்பொழுது அவரிடத்தில்‌ வந்து அப்பா பிதாவே என்று அழைக்கலாம்‌. நாம்‌ விசுவாசத்தோடு தேவனிடத்தில்‌ வரவேண்டும்‌.

Page 32

எபி 11:1 விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின்‌ உறுதியும்‌, காணப்படாதவைகளின்‌ நிச்சயமுமாயிருக்கிறது. எபி 11:6 விசுவாசமில்லாமல்‌ தேவனுக்குப்‌ பிரியமாயிருப்பது கூடாத காரியம்‌: ஏனென்றால்‌, தேவனிடத்தில்‌ சேருகிறவன்‌, அவர்‌ உண்டென்றும்‌ அவர்‌ தம்மைத்‌ தேடுதகிறவர்களுக்குப்‌ பலன்‌ அளிக்கிறவரென்றும்‌ விசுவாசிக்க வேண்டும்‌. நாம்‌ ஒவ்வொன்றிற்கும்‌ தேவனையே சார்ந்திருக்க வேண்டுமென்பதே அவரின்‌ வாஞ்சை. நாம்‌ ஏன்‌ ஜெபிக்க வேண்டும்‌ 2 1. நாம்‌ ஜெபிக்க வேண்டும்‌ என்று ஆண்டவர்‌ நமக்குக்‌ கட்டளை கொடுத்துள்ளார்‌. கர்த்தரைக்‌ கண்டடையத்தக்க சமயத்தில்‌ அவரைத்‌ தேடுங்கள்‌; அவர்‌ சமீபமாயிருக்கையில்‌ அவரை நோக்கிக்‌ கூப்பிடுங்கள்‌. ஏசா 55:6 என்னை நோக்கிக்‌ கூப்பிடு, அப்பொழுது நான்‌ உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும்‌ உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்‌. எரேமியா 33:3 கேளுங்கள்‌, அப்பொழுது உங்களுக்குக்‌ கொடுக்கப்படும்‌; தேடுங்கள்‌, அப்போழுது கண்டடைவீர்கள்‌; தட்டுங்கள்‌, அப்பொழுது உங்களுக்குத்‌ இறக்கப்படும்‌. மத்தேயு 7:7 2. நாம்‌ ஜெபிக்கும்போது தேவன்‌ பதிலளிக்கிறார்‌. நாம்‌ உற்சாகப்படுத்தப்‌ படுகிறோம்‌. தாவீதின்‌ அனுபவமாவது சங்‌ 6:8. அக்கிரமக்காரரே, நீங்கள்‌ எல்லாரும்‌ என்னைவிட்டு அகன்று போங்கள்‌; கர்த்தர்‌ என்‌ அமுகையின்‌ சத்தத்தைக்‌ கேட்டார்‌. ஏசா 65:24 அப்பொழுது அவர்கள்‌ கூப்பிடுகிறதற்கு முன்னே நான்‌ மறு உத்தரவு கொடுப்‌; அவர்கள்‌ பேசும்போதே நான்‌ கேட்பேன்‌. 3. எப்படி ஜெபத்தை ஏறெடுப்பது : தாவீதின்‌ வாழ்க்கை 1. பாவமில்லாமல்‌ 32

Page 33

என்‌ இருதயத்தில்‌ அக்கிரம சந்தை

கொண்டிருந்தேனானால்‌, ஆண்டவர்‌ எனக்குச்‌ செவி

கொடார்‌. சங்‌ 66:18

அறிக்கையிடுதல்‌ : என்‌ துன்பத்தையும்‌ என்‌ வருத்தத்தையும்‌ பார்த்து, என்‌ பாவங்களையெல்லாம்‌ மன்னித்தருளும்‌. சங்‌ 25:18. நான்‌ ... என்‌ பாவத்தை உமக்கு அறிவித்தேன்‌; என்‌ மீறுதல்களைக்‌ கர்த்தருக்கு அறிக்கையிடுவேன்‌... சங்‌ 32:5

பாவமன்னிப்பின்‌ நிச்சயம்‌ : என்‌ பாவத்தின்‌ தோஷத்தை மன்னித்தீர்‌. சங்‌ 32:5

உன்‌ அக்கிரமங்களை எல்லாம்‌ மன்னித்து... சங்‌ 103:3

8. உண்மையாய்‌ அவரைக்‌ கூப்பிடுதல்‌

தம்மை நோக்கிக்‌ கூப்பிடுகிற யாவருக்கும்‌, உண்மையாய்த்‌ தம்மை நோக்கிக்‌ கூப்பிடுகிற யாவருக்கும்‌, கர்த்தர்‌ சமீபமாயிருக்கிறார்‌. சங்‌ 145:18

3. தேவனுடைய சத்தத்தை நிறைவேற்றி ஜெபிக்க வேண்டும்‌.

யோவான்‌ 9:31 ஒருவன்‌ தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச்‌ சித்தமானதைச்‌ செய்தால்‌ அவனுக்குச்‌ செவிகொடுப்பார்‌.

2. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்‌ நாமத்தில்‌ ஜெபிக்க வேண்டும்‌.

எபே 2:18 ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில்‌ சேடும்‌ சிலாக்கியத்தை அவர்‌ (இயேசுகிறிஸ்து மூலமாய்‌ பெற்றிருக்கிறோம்‌.

யோவான்‌ 16:23 மெய்யாகவே மெய்யாகவே நான்‌ உங்களுக்குச்‌ சொல்லுகிறேன்‌. நீங்கள்‌ என்‌ நாமத்தினாலே பிதாவினிடத்தில்‌ கேட்டுக்‌ கொள்வதெதுவோ அதை அவர்‌ உங்களுக்குத்‌ தருவார்‌. ஜெபம்‌ : மூன்று வகைப்படும்‌ 1. பகிரங்கமான ஜெபம்‌ : வேதாகமம்‌ பொதுவான

Page 34

இடங்களில்‌ பகிரங்கமாக ஜெபிப்பதைப்‌ பற்றி அநேக எடுத்துக்காட்டுகளைக்‌ கூறுகிறது.

அ) அப்பொழுது யோசுவா...ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர்‌ கைகளில்‌ ஒப்புக்கொடுப்பதற்காவா தேவரீர்‌ இந்த ஜனத்தை யோர்தானைக்‌ கடக்கப்பண்ணினீர்‌ ?... என்றான்‌. யோசுவா 7:6-9 இங்கு யோசுவா பகிரங்கமாக ஜெபிக்கிறான்‌.

ஆ) ஆபிரகாம்‌ ஈசாக்கு இஸ்ரவேல்‌ என்னும்‌ எங்கள்‌ பிதாக்களின்‌ தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின்‌ இருதயத்தில்‌ உண்டான இந்தச்‌ சிந்தையையும்‌ நினைவையும்‌ என்றைக்கும்‌ காத்து, அவர்கள்‌ இருதயத்தை உமக்கு நேராக்கியருளும்‌ என்றான்‌. 1நாளா 29:18 இங்கு தாவீது பகிரங்கமாக ஜெபிக்கிறார்‌.

இ) அவர்கள்‌ (சபையினர்‌) அதைக்‌ கேட்டு, ஒருமனப்பட்டுத்‌ தேவனை நோக்கிச்‌ சத்தமிட்டு: கர்த்தாவே, நீர்‌ வானத்தையும்‌ பூமியையும்‌ சமுத்திரத்தையும்‌ அவைகளிலுள்ள யாவற்றையும்‌ உண்டாக்கின தேவனாயிருக்கிறீர்‌. அப்‌ 4:2 இங்கு ஆதி சபைகள்‌ பகிரங்கமாக ஜெபித்தன.

ஈ) நடுராத்திரியிலே பவுலும்‌ சீலாவும்‌ ஜெபம்பண்ணி, தேவனைத்‌ துதித்துப்‌ பாடினார்கள்‌; காவலில்‌ வைக்கப்பட்டவர்கள்‌ அதைக்‌ கேட்டுக்‌ கொண்டிருந்‌ தார்கள்‌. அப்‌ 16:25 இங்கு பவுலும்‌ சலோவும்‌ பகிரங்கமாக ஜெபித்தனர்‌.

2. குடும்ப ஜெபம்‌: நாம்‌ குடும்பமாக ஜெபிக்க வேண்டுமென்று வேதாகமம்‌ கூறுகிறது. உபா 6:6,7 இன்று நான்‌ உனக்கு கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள்‌ உன்‌ இருதயத்தில்‌ இருக்கக்கடவது. நீ

Page 35

அவைகளை உன்‌ பிள்ளைகளுக்குக்‌ கருத்தாய்ப்‌ போதித்து, நீ உன்‌ வீட்டில்‌ உட்கார்ந்திருக்கிறபோதும்‌, வழியில்‌ நடக்கிறபோதும்‌, படுத்துக்‌ கொள்ளுகிறபோதும்‌, எழுந்திருக்கிறபோதும்‌ அவைகளைக்‌ குறித்துப்‌ பேசு.

ஏசாயா தீர்க்கதரிசி இக்கட்டளைக்குக்‌ கழ்ப்படிந்ததினால்‌, கீழகண்ட சாட்சியைக்‌ கூற முடிந்தது.

ஏசா 8:18 இதோ, நானும்‌, கர்த்தர்‌ எனக்குக்‌ கொடுத்த பிள்ளைகளும்‌ சீயோன்‌ பர்வதத்தில்‌ வாசமாயிருக்கிற சேனைகளின்‌ கர்த்தராலே இஸ்ரவேலில்‌ அடையாளங்களாகவும்‌ அற்புதங்களாகவும்‌ இருக்கிறோம்‌.

8. தனி நபரின்‌ ஜெபம்‌ : தனியாக ஜெபித்தவர்களின்‌ மாதிரியைக்‌ குறித்து வேதாகமத்தில்‌ அநேக குறிப்புகளைக்‌ காண்கிறோம்‌. ஆபிரகாம்‌ தனிமையில்‌ தேவனிடம்‌ ஜெபித்தான்‌. ஆதி 18:22,23 ஆபிரகாமோ பின்னும்‌ கர்த்தருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான்‌. அப்பொழுது ஆபிரகாம்‌ சமீபமாய்ச்‌ சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும்‌ அழிப்பீரோ என்றான்‌. எரேமியா தேவனிடம்‌ தனிமையில்‌ ஜெபித்தான்‌. எரே 32:16-25 நான்‌ கர்த்தரை நோக்கி பண்ணின விண்ணப்பமாவது... சாட்சிகளை வையென்று சொன்னீரே என்றேன்‌. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும்‌ பிதாவினிடத்தில்‌ தனிமையில்‌ ஜெபித்தார்‌. லூக்கா 6:12 அந்நாட்களிலே, அவர்‌ ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல்‌ ஏறி, இராமுழுவதும்‌ தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்‌ கொண்டிருந்தார்‌.

Page 36

லூக்கா 22:41 அவர்களை விட்டுக்‌ கல்லெறி தூரம்‌ அப்புறம்போய்‌, முழங்கால்படியிட்டு ஜெபித்தார்‌. ஜெபத்தின்‌ மூலம்‌ நாம்‌ எல்லாவற்றிற்காகவும்‌ தேவனைச்‌ சார்ந்திருக்‌ கிறோம்‌ என அறிவிக்கிறோம்‌. எனவே, நாம்‌ சபையில்‌ எதைச்‌ செய்தாலும்‌, பாடினாலும்‌, ஆராதித்தாலும்‌, அப்பம்‌ பிட்டாலும்‌, ஜெபித்தாலும்‌ தேவனுடைய வார்த்தையில்‌ கொடுக்கப்பட்டுள்ள உபதேசத்தின்‌ அடிப்படையிலேயே செய்கிறோம்‌. முதல்‌ நூற்றாண்டு விசுவாசிகள்‌ இந்த உபதேசங்களில்‌ முற்றிலும்‌ நிலைத்திருந்தார்கள்‌. அவர்கள்‌ வாழ்க்கை முறையே நமக்கு மாதிரியாகும்‌. நாம்‌ இந்த உபதேசங்களில்‌ உறுதியாய்த்‌ தரித்திருக்க வேண்டும்‌. முடிவுரை தற்போது, நம்முடைய சபைகளில்‌ பெரும்பாலானவை நம்‌ அருமை சகோ. பக்த்சிங்கிற்கு அளிக்கப்பட்ட இந்த தரிசனத்தை பின்பற்றுவதில்லை. அதற்கு முக்கிய காரணம்‌, நாம்‌ சபையில்‌ அதிக நேரம்‌ செலவிட விரும்புவதில்லை. உலகக்‌ காரியங்களில்‌ நாம்‌ சக்குண்டிருக்கிறோம்‌. பழைய தலைமுறையினரும்‌ கர்த்தருடைய நாளில்‌ மூன்று செய்திகள்‌ வேண்டாம்‌, இரண்டு செய்திகள்‌ போதும்‌ என்கின்றனர்‌. நாம்‌ உலகத்தோடு ஒத்துப்‌ போவதால்‌ நம்முடை சபைகளில்‌ அதிகமான கருத்து வேறுபாடுகள்‌ உண்டாகி பிளவுகள்‌ ஏற்பட்டு பிரிந்து போகின்றனர்‌. நாம்‌ இங்கே செய்கிற எல்லாவற்றிற்கும்‌ கணக்கு கொடுக்க வேண்டும்‌. நாம்‌ ஏனோதானோ என்றிருப்பதற்கும்‌ ஆண்டவர்‌ நியாயந்தீர்ப்பார்‌. எனவே, நாம்‌ மனிதரைப்‌ பிரியப்படுத்தாமல்‌, நம்‌ வழிகளை ஆராய்ந்து பார்த்து, ஆண்டவருக்கு மட்டும்‌ 36

Page 37

பிரியமானதைச்‌ செய்ய நம்‌ ஒவ்வொருவருக்கும்‌ (சிறப்பாக சபையில்‌ பொறுப்பானவர்களுக்கு) தேவன்தாமே உதவி செய்வாராக.) தேவன்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. 37

You’ve reached the end of this resource.